சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபருக்கு தக்க பதிலடி கொடுத்த அபிஷேக் பச்சன்!

சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபருக்கு தக்க பதிலடி கொடுத்த அபிஷேக் பச்சன்!

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்திருப்பது அனைவரது மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் இயங்காததால் தீவிர சினிமா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருந்தாலும் தங்கள் மனக்கவலையை ஓடிடி-கள் மூலம் போக்க முனைகின்றனர். இருப்பினும் தியேட்டர்கள் தரும் அனுபவத்தை டிஜிட்டல் தளங்களால் கொடுக்க முடியாது அல்லவா. தற்போது நடிகர் அபிஷேக் பச்சனும் தியேட்டர்கள் திறப்பது குறித்து ட்வீட் ஒன்று வெளியிட்டிருந்தார்.
Abhishek Bachchan tests negative for COVID-19, discharged - Rediff.com movies
“காத்திருக்க முடியவில்லை. பாப்கார்ன், சமோசா மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் !!! ஆரவாரம், கைதட்டல், விசில் மற்றும் டான்ஸ். இந்த உலகத்திலே மிகவும் சிறந்த இடம்! என்று பதிவிட்டிருந்தார்.


அப்போது தியேட்டர்கள் திறந்து அங்கு செல்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான மருத்துவ செலவை நீங்கள் ஏற்பீர்களா? ஆம் என்றால் கொண்டாடுங்கள். இல்லை என்றால் வையை மூடிக்கொண்டு இருங்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அபிஷேக் பச்சன் “எனது ட்வீட்டை நீங்கள் ஏன் மீண்டும் ஒருமுறை படிக்கக் கூடாது. தியேட்டர்களை மீண்டும் திறப்பது பாதுகாப்பானது என்று அரசாங்கம் தீர்மானிக்கும் போது “என்னால் காத்திருக்க முடியவில்லை என்று தான் சொன்னேன். பாதுகாப்பான முறையில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கும்  என்று நான் எதிர்நோக்குகிறேன். சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடுவதை நிறுத்துங்கள். முரட்டுத்தனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.” என்று தெரிவித்துள்ளார். அபிஷேக்கின் இந்த தன்மையான பதிலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.


 

Share this story