அய்யப்பனும் கோஷியும் இந்தி ரீமேக்கிலிருந்து வெளியேறிய அபிஷேக் பச்சன்!?

அய்யப்பனும் கோஷியும் பட இந்தி ரீமேக்கில் இருந்து அபிஷேக்பச்சன் விலகியதாகக் கூறப்படுகிறது.
மலையாளத்தில் பிஜு மேனன் மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். அதையடுத்து தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில்அந்தப் படம் ரீமேக் ஆகி வருகிறது.
தற்போது இந்தியிலும் அய்யப்பனும் கோஷியும் படம் ரீமேக் ஆக உள்ளது. ஜான் ஆபிரகாம் மற்றும் அபிஷேக் பச்சன் இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
தற்போது அபிஷேக் பச்சன் அந்தப் படத்தில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் ஜெகன் சக்தி இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்பட்டது. அபிஷேக் ஜான் ஆப்ரகாம் கூட்டணி தூம் மற்றும் தோஸ்தானா படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
எனவே இந்தக் கூட்டணி மூன்றாம் முறையாக இணைய இருப்பதை அடுத்து பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அபிஷேக் பச்சன் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. படத்திலிருந்து அவர் விலகியதற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை. பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அவர் வெளியேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது
எனவே படக்குழுவினர் அவருக்குப் பதிலாக வேறொரு நடிகரைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. அபிஷேக்பச்சன் தற்போது பார்த்திபன் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.