பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா உறுதி!
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அமீர் கானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நடிகர் அமீர் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் வீட்டில் சுய தனிமையில் இருக்கிறார். அவர் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுகிறார், தற்போது அவர் நலமாக இருக்கிறார்.
சமீப காலங்களில் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீர் கான் சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று தான் அனைத்து சமூக ஊடங்களில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்திருந்தார். அவர் தற்போது ‘லால் சிங் சத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.