ஆமீர் கான் மகளின் பிகினி பிறந்தநாள் கொண்டாட்டம்... இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை!

நடிகர் ஆமீர் கானின் மகள் ஈரா கானின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஈரா கான் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார், பெற்றோர்கள் அமீர் கான், ரீனா தத்தா மற்றும் ஈராவின் காதலன் நுபுர் ஷிகாரே. அமீரின் இரண்டாவது மனைவி, கிரண் ராவ் மற்றும் அவர்களது மகன் ஆசாத் ஆகியோரும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிகினி அணிந்து கலந்து கொண்டுள்ளார் ஈரா கான். மேலும் நீச்சல் குளத்தில் பிகினி உடைகளில் உல்லாசமாகக் கொண்டாடியுள்ளனர்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தில் அமீர் கானின் மகள் அணிந்துள்ளது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆமீர் கான் ஒரு முஸ்லீம் என்பதால் இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் பலர் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லிக் கொள்ள தகுதியற்றவர் என்று கொந்தளித்து வருகின்றனர். இதற்கு எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.