ஓடிடி பக்கம் கவனம் செலுத்தும் அக்ஷய்குமார்.. விரைவில் வெளியாகிறது ‘பெல்பாட்டம்’
நடிகர் அக்ஷய்குமாரின் ‘பெல்பாட்டம்’ விரைவில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக இந்தியா முழுவதும் ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளன. கொரானா தொற்று எப்போது குறையும் என்று தெரியாத சூழ்நிலையில் திரையரங்குகள் திறப்பது சாத்தியமில்லாத ஒன்று. அதனால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் அக்ஷய் குமார் தனது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு கொரானா நேரத்தில் தயாரான ‘லஷ்மி’ படத்தை தீபாவளி பண்டிகையொட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தை அதிகப்படியான மக்கள் பார்த்து நல்ல வருமானத்தை கொடுத்ததாக படக்குழு அறிவித்தது.
தனது படங்கள் ஓடிடியில் நல்ல லாபத்தை ஈட்டுவதால், சமீபத்தில் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் தயாரான ‘பெல்பாட்டம்’ திரைப்படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய அக்ஷய்குமார் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, வாணி கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதாகவும், பல நூறு கோடிகள் கொடுத்து வாங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.