பிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இந்தியாவின் பிரபல நடிகர். தமிழில் வில்லன் கதாபாத்திரங்களில் பல படங்களில் மிரட்டியுள்ளார். தற்போது ஆஷிஷ், தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“நான் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள். எனக்கு இப்போது எந்த அறிகுறியும் தென்படவில்லை. விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். உங்கள் வாழ்த்துக்களும் அன்பும் விலைமதிப்பற்றவை.!” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “நேற்று எனக்கு கொஞ்சம் காய்ச்சல் இருந்தது. பரிசோதித்து பார்த்த போது எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. நான் இப்போது டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எல்லாம் நன்றாக நடக்கும்” என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.