கேட்டோ டயட் முறையை பின்பற்றிய பிரபல நடிகை திடீர் மரணம்!
பிரபல ஹிந்தி மற்றும் பெங்காலி நடிகை மிஸ்டி முகர்ஜி சிறுநீரக செயலிழப்பு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
நடிகை மிஸ்டி முகர்ஜி பல ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடித்தவர். இவர் உடல் எடையைக் குறைப்பதற்காக கேட்டோ எனும் டயட் முறையைப் பின்பற்றி வந்துள்ளார்.
கேட்டோ டயட்(Ketogenic diet) என்பது கார்போஹைட்ரேட் குறைவான அளவு, கொழுப்பு அதிகமாக, போதுமான அளவு புரதம் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது. இந்த டயட் முறையால் உடலில் கார்போஹைட்ரேட்களை விட கொழுப்புகளே அதிகமாக எரிக்கப்படுகின்றன.

அந்தப் டயட்டைப் பின்பற்றியதால் தான் அவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீரகம் செயலிழந்ததால் மிஸ்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
“நடிகை மிஸ்டி முகர்ஜி தனது நடிப்பு மற்றும் நடனத்தால் பல படங்கள் மற்றும் இசை வீடியோக்களில் தனது திறமையை வெளிப்படுத்தினார். கெட்டோ டயட் காரணமாக, அவரது சிறுநீரகம் செயலிழந்தது மற்றும் வெள்ளிக்கிழமை இரவு அவர் உயிரிழந்துள்ளார். சிறுநீரக செயலிழப்பால் நடிகை மிகுந்த வேதனையை சந்தித்தார். மறக்க முடியாத மற்றும் துரதிர்ஷ்டவசமான இழப்பு. அவருடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.” என்று பிரபல டிஜிட்டல் செய்தி தளம் தெரிவித்துள்ளது.