கொரானா அச்சம் எதிரொலி… ஓடிடியில் வெளியாகிறது சல்மான் கானின் ‘ராதே’…
கொரானா அச்சம் காரணமாக ஒரேநேரத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் ‘ராதே’ திரைப்படம் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ராம்ஜான் பண்டிகையொட்டி சல்மான் கானின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி வெளியாகும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றியையும் பெறுகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரம்மாண்டி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியிருக்கும் படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இவர்களுடன் ரந்தீப் ஹுடா, ஜாக்கி ஷெராஃப், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். கொரானா தொற்று காரணமாக இந்த படம் வெளியாகுமா என சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி வரும் மே 13-ம் தேதி இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தை சல்மான் கான், சோகையில் கான், அதுல் அக்னிகோத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டைவிட கொரானா பரவல் மகாராஷ்டிராவில் அதிகரித்து வருவதால் இந்த படத்தை திரையரங்குகளில் வந்து ரசிகர்கள் பார்க்க முடியுமா என்ற சந்ததேகம் இருந்தது. அதேபோன்று இருக்கைகளையும் 50 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஓடிடியில் அதே தேதியில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் ஸீ பிளக்ஸ் மற்றும் ஸீ 5 ஓடிடி தளங்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.