நடிகர் ஷாருக்கானுக்கு அச்சுறுத்தல் ... கூடுதல் பாதுகாப்பு...

நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்... கூடுதல் பாதுகாப்பு...

நடிகர் ஷாருக்கானுக்கு அச்சுறுத்தல்கள் வந்ததால் அவருக்கு மராட்டிய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

பாலிவுட் பாஷா என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். அண்மையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம்  பெரும் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதேபோல் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் படமும் ஆயிரம் கோடி வசூலித்தது. ஜவான், பதான் என அடுத்தடுத்து இரண்டு வெற்றி கொடுத்த நடிகர் ஷாருக்கானுக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்... கூடுதல் பாதுகாப்பு...

இதனால் அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மராட்டியத்தின் சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 துப்பாக்கி ஏந்திய போலீசார் அவருக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஷாருக்கானின் வீட்டிற்கும் 4 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story