பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா... புதிய பாலிவுட் படம் குறித்த அப்டேட்
பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கும புதிய படத்தில் கதாநாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வந்த அவர், 'ஃபேமிலி மேன்' வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். இந்த வெப் தொடர் மிகவும் பிரபலமாக அடுத்தடுத்த பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்தையடுத்து இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தினேஷ் விஜன் இயக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் பிசியான நடிகையான சமந்தா, கைவசம் இருந்த சகுந்தலம், யசோதா ஆகிய படங்களை நடித்து முடித்துவிட்டார். தற்போது விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகும் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.