”அந்த இடத்தில ஊசி போட சொன்னாங்க”.. பகீர் கிளப்பும் பிரபல பாலிவுட் நடிகை !

 adhika apte

சினிமாவில் வாய்ப்புகளுக்காக தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். 

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அமைதியான பெண்ணாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

 adhika apte

அதன்பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காத அவர், ஹாலிவுட்டிலும் படங்களை நடித்துள்ளார். அதோடு சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதுவும் துணிச்சலான கதாபாத்திரங்களையே  தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். அதில், நான் வாய்ப்பு தேடி வந்தபோது, என் உடலில் நிறைய அறுவை சிகிச்சை செய்ய சொன்னார்கள். குறிப்பாக மார்ப்பகத்தை பெரிதாக்க ஊசி போட சொல்லி அறிவுறுத்தினார்கள். இதுதவிர கன்னம், கால் என பல்வேறு பாகங்களிலும் அறுவை சிகிச்சை செய்ய வற்புறுத்தினார்கள். ஆனால் நான் எல்லாவற்றையும் மறுத்துவிட்டேன். அதனால் நான் சினிமாவில் வளராமல் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

Share this story