சர்வதேச விழாவில் பாராட்டை பெற்ற ஆலியா பட் படம் !

ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள கங்குபாய் கொத்தேவாலி படம் சர்வதேச விழாவில் பாராட்டை பெற்றுள்ளது.
பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குபாய் கொத்தேவாலி’. இந்த படத்தை பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார். ஆலியா பட் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மும்பை காமாட்டிபுராவில் கோலோச்சிய கங்குபாய் கொத்தேவாலி என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படத்தில் ஆலியா பட் நடித்துள்ளார். கொரானா காரணமாக இந்த படத்தின் பல ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் வெளியிட முடியவில்லை.
இதையடுத்து இப்படம் வரும் பிப்ரவரி 25-ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் பெர்லின் சர்வதேச விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.