ஆர்ஆர்ஆர் பதிவுகளை நீக்கியது உண்மைதான், ஆனால்... நடிகை ஆலியா பட் விளக்கம்!

rrr-g

ஆர்ஆர்ஆர் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஆலியா பட் விளக்கம் அளித்துள்ளார்.  

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரேயா, சமுத்திரகனி, ஒலிவியா மோரிஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

alia-bhaat-in-rrr

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் ஹாலிவுட் படங்களையே மிஞ்சி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. 

படத்தில் ஆலியாவின் கதாபாத்திரம் குறைந்த நிமிடங்களே இடம் பெற்றிருந்தது. ஆனால் படத்தில் ஆலியாவின் கதாபாத்திரத்திற்கு அந்தளவிற்கு பெரிய சிறப்பு ஒன்றும் இல்லை. 

இதனால் கடுப்பான ஆலியா பாட் சமூக வலைத்தளத்தில் ராஜமௌலியை அன்ஃபாலோ செய்ததாகவும் ஆர்ஆர்ஆர் படம் குறித்து தான் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளதாகவும்கூறப்பட்டது . 

கடந்த சில நாட்களாக இது சமூக வலைத்தளங்களில் பலரால் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

"தற்செயலாக நடக்கும் சில சம்பவங்களை கொண்டு தேவைஇல்லாத வதந்திகளை பரப்பாதீர்கள். நான் எப்போதும் பழைய பதிவுகளை நீக்கி எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சீரமைத்துக் கொள்வேன்.

RRR

ஆர்ஆர்ஆர் போன்ற படத்தில் நடித்ததை நினைத்து நான் பெருமையாகவே உணர்கிறேன். சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதையும், ராஜமௌலி சார் இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உடன் இணைந்து நடிப்பதையும் நான் அதிகம் விரும்பினேன். இன்னும் சொல்லப்போனால், ஆர்ஆர்ஆர் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நொடியும், சின்னச் சின்ன விஷயங்களும் எனக்கு நிறைய அனுபவத்தைக் கொடுத்தது.

இப்போது நான் கவலைப்படுவதற்கும், உங்களிடம் இதை தெளிவுபடுத்துவதற்கும் ஒரே காரணம், ராஜமௌலி சார் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் அந்தப் படத்துக்கு உயிர் கொடுக்க பல ஆண்டுகள் கொடுத்த உழைப்பு ஏராளம். எனவே இந்தப் படம் தொடர்பாக என்னைத் தொடர்புபடுத்தி வரும் அனைத்து தகவல்களையும் நான் மறுக்கிறேன்" என்று ஆலியா தெரிவித்துள்ளார். 

Share this story