கிளாமரில் கிறங்கடிக்கும் ஜான்வி கபூர்.. வைரல் புகைப்படங்கள் !
பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். பாலிவுட்டில் பிரபல நடிகையாக மாறிவிட்ட அவர், தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'தடக்' என்ற படத்தின் மூலம் சினிமாவின் நுழைந்த ஜான்விக்கு 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.
கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆன ‘குட் லக் ஜெரி’ படத்திலும் நடித்தார். நீண்ட நாட்களாக தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்த அவர், சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோன்று நடிகர் ராம் சரண் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், தொடர்ந்து கிளாமரில் இருக்கும் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை ஜான்வி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.