இது பார்ட்டி ஃமோட்... ஜான்வி கபூரின் அசத்தல் போட்டோஷூட்!
நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மகள் ஆவார். 'தடக்' என்ற படத்தின் மூலம் சினிமாவின் நுழைந்தார் ஜான்வி. பின்னர் குஞ்சன் சக்சேனா திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தத். தற்போது சில படங்களில் ஜான்வி நடித்து வருகிறார்.
ஜான்வி எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர். கிளாமரில் இறங்கிக் கலக்குவார். ஜான்வி எப்போதும் பிகினி காஸ்டியூம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஜான்வியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகின்றன. பார்ட்டி மோடில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களுக்கு பார்ட்டியாக அமைந்துள்ளன.
ஜான்வி தற்போது மலையாளத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான ஹெலன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.