நாக்க மூக்க பாடலுக்கு கவர்ச்சி உடையில் குத்து டான்ஸ் ஆடிய பாலிவுட் நடிகை!

janhvi-kapoor-34

நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார்.  தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஜான்வி குஞ்சன் சக்சேனா படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்துக் காட்டினார்.

janhvi-kapoor-23

அந்தப் படம் அவருக்கு ஒரு நடிகையாக அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது. தற்போது தோஸ்தானா மற்றும் குட் லக் ஜெர்ரி என்ற இரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜான்வி தற்போது 'நாக்க மூக்க' பாடலுக்கு நடனமாடி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது நண்பர்களுடன் நாக்கமுக்க பாடலுக்கு ஜான்வி கவர்ச்சியாக உடையணிந்து குத்து டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோவைப் பார்க்கும் ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர்.

நாக்க முக்க பாடல் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நகுல் நடிப்பில் வெளியான 'காதலில் விழுந்தேன்' படத்தில் அந்தப் படம் பெற்றிருந்தது.  விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்

Share this story