“அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடுவேன்”... நடிகை கங்கனாவால் அதிர்ச்சியில் ரசிகர்கள் !

​​kangana ranauat

தனது வீட்டின் முன்பு நடிகை கங்கனா எழுதி வைத்துள்ள வாசகம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

பாலிவுட் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இந்தியை தவிர்த்து தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர், சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 

​​kangana ranauat

அந்த வகையில் இந்தியில் இந்திராகாந்தி வாழ்க்கை வரலாறு படமான ‘எமர்ஜென்சி’ படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்து தமிழில் ‘சந்திரமுகி 2’-ல் படத்தை முடித்துள்ளார். இந்த படத்தில் கங்கனா சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

​​kangana ranauat

இதற்கிடையே எப்போதும் சர்சை கருத்துக்களை பேசி, அதில் சிக்கிக் கொள்வது கங்கனாவின் வழக்கமாக இருக்கிறது. தற்போது அதுபோன்று ஒரு விஷயத்தை செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் கங்கனா. தற்போது மும்பையிலுள்ள தன் வீட்டை பழுது பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வீடியோ தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வீட்டின் வெளியில் கங்கனா வைத்துள்ள அறிவிப்பு பலகை தான் சர்ச்சையாகியுள்ளது. 

அந்த பலகையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைப்பவர்கள் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள். அதில் உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள் என எழுதப்பட்டு உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், இப்படி அறிவிப்பு பலகை வைப்பது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

 

Share this story