ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.. ஆனால் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் - அனுராக் காஷ்யப் மீது நடிகை குற்றச்சாட்டு !

payal kosh

 பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட இவர், பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். அதோடு  தமிழில் ‘இமைக்க நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அந்த படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

payal kosh  

இதற்கிடையே இயக்குனர் அனுராக் காஷ்யப் தொடர்ந்து பாலியல் புகார்களில் சிக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர்‌ அனுராக் காஷ்யப் மீண்டும் ஒரு பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.‌ இது குறித்து பேசிய பிரபல நடிகை பாயல் கோஷ் தென்னிந்தியாவில் பல விருது வாங்கிய இயக்குனர் பணியாற்றியுள்ளேன். 

payal kosh

ஆனால் ஒருவர் கூட என்னை தொட்டு கூட பேசியது இல்லை. இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஒரு படம் கூட நடிக்கவில்லை.‌ ஆனால் அவரை சந்திக்கும் போது என்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இயக்குனர் அனுராக் காஷ்யப் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share this story