‘இப்படிதான் நான் கதையை தேர்வு செய்வேன்’ – மனம் திறந்த ‘பூஜா ஹெக்டே’.

photo

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வரும் பூஜாஹெட்டே தன் மீது வீசப்பட்டு வந்து கதை தேர்வு குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.

photo

கோலிவுட்டில் முகமூடி படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து  அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெட்டே. அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக விஜய்- நெல்சன் கூட்டணியில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார். இந்த படம் விமர்சனரீதியாக பல ட்ரோல்களை சந்தித்தாலும், வசூலில் வெற்றி பெற்றது. குறிப்பாக அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அதில் பூஜா ஆடிய நடனம் அல்டிமேட் எனலாம்.

photo

இந்த நிலையில் சமீபத்தில் பூஜா ஹெக்டே,  சல்மான் கானுக்கு ஜோடியா நடித்த கிஸி கி ஜான் கிஸி ஜான் திரைப்படம் வெளியானது.  வீரம் படத்தின் ரீமேக்காக இந்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து ரசிகர்கள், பூஜா ஹெக்டேவின் கதை தேர்வு குறித்து விமர்சிக்க தொடங்கினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.   அதாவது, “ நான் ஒன்றும் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வரவில்லை  என்னைத்தேடி ஒரு நாளைக்கு 20 கதைகள் வருவதற்கு, நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். என்னை தேடி வரும் கதையை தான் நான் தேர்வு செய்து நடிக்கமுடியும்” என தன்மீதான கதை தேர்வு விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 

Share this story