ஆண் நடிகர்களுக்கு நிகரான சம்பளம் - நடிகை பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி !

priyanka chopra

ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளம் பெறுவதில் மகிழ்ச்சி என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இந்தி, ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் நடித்துள்ள அவர், தற்போது ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரான ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர். 

ரிச்சர்ட் மோடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடர் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பிரியங்கா சோப்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரெய்லரால் வெப் தொடருக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

priyanka chopra

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், சினிமா துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றி வருகிறேன். இதுவரை 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 2 டிவி தொடர்களிலும் நடித்துள்ளேன். ஆனால் ‘சிட்டாடல்’ தொடரால் மட்டுமே என் வாழ்க்கை மாறியுள்ளது. ஏனென்றால் இந்த தொடரில் தான் ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளம் வாங்கியுள்ளேன். இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

‘சிட்டாடல்’ வெப் தொடரை போன்று எனது மற்ற படங்களிலும் இதே அளவிலான உழைப்பை கொடுத்துள்ளேன். ஆனால் குறைவான ஊதியமே அந்த படங்கள் மூலம் கிடைத்தது. நீங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அதற்கான சம்பளம் கொடுப்பது நியாயமானது என்று அமேசான் தரப்பில் கூறினர். நீங்கள் சொல்வது சரிதான். இது நியாயமான ஊதியம் தான் என்று அவர்களுக்கு பதில் அளித்தேன் என்று கூறினார். 

 

Share this story