பிரபல தயாரிப்பாளருடன் ரகசிய திருமணமா ?.. விளக்கமளித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் !

rakul preet singh

பிரபல பாலிவுட் தயாரிப்பாளருடன் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக வந்த தகவலுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் விளக்கமளித்துள்ளார். 

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ப்ரீத் சிங். முதன்முதலில் தெலுங்கு திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக இருக்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

rakul preet singh

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை நடிகை ரகுல் ப்ரீத் சிங் காதலித்து வருகிறார். இதை கடந்த ஆண்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங்கே பொது வெளியில் உறுதிப்படுத்தியிருக்கிறார். 

rakul preet singh

இந்நிலையில் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், பிரபலமானவர்களின் காதலை மறைத்து வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதனால் என் காதலை முன்னரே அறிவித்துவிட்டேன். ஏற்கனவே எனக்கு திருமணம் நடைபெற்றதாக வதந்திகள் சில மாதங்களுக்கு வெளியானது. தற்போது இரண்டாவது முறையாக திருமணம் குறித்து வதந்திகள் வெளியாகியுள்ளது. அதனால் எனக்கு இரண்டு முறை திருமணம் செய்துவிட்டார்கள் என்று கேஷூவலாக வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.  

Share this story