தன்னுடைய பிரம்மாண்ட வீட்டை விற்கும் நடிகை சோனாக்சி..?
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வருபவர் சோனாக்சி சின்ஹா. இவர் தபாங் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். பிறகு பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகி ரசிகர்களை சம்பாதித்தார். இவர் ஜாகீர் இக்பால் என்ற நடிகரை காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு மும்பையில் சோனாக்சிக்கு சொந்தமான அடுக்குமாடி சொகுசு வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீட்டை தற்போது, சோனாக்சி விற்க போவதாகவும் இந்த வீட்டிற்கு ரூ. 25 கோடி வரை விலை நிர்ணயம் செய்துள்ள சோனாக்சி அதனை விளம்பர படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த நிலையில், திருமணம் நடந்து சில மாதங்களில் இவ்வாறு திடீரென வீட்டை விற்க என்ன காரணம் இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.