திருமணம் எப்போது ? ... நடிகை டாப்ஸி புதிய தகவல் !

taapsee
 தனது திருமணம் குறித்து நடிகை டாப்ஸி புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். 

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருபவர் நடிகை டாப்ஸி. தமிழில் தனுஷ் நடித்து வெற்றிப்பெற்ற ஆடுகளம் படத்தின் மூலம்‌ அறிமுகமானார். அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. 

taapsee

தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார். தொடர்ந்து பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் ‌டாப்ஸியின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை ‌பெற்று தந்துள்ளது. இதையடுத்து அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் ‘டூ-பாரா’, ‘லூப் லாபெட்டா’, மற்றும் ‘சபாஷ் மித்து’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை டாப்ஸியிடம், திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சினிமாவில் எனக்கென்று எந்த போட்டியும் இல்லை. அதனால் வாழ்க்கை சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறேன். அவரை தான் திருமணமும் செய்யவுள்ளேன். ஆனால் எப்போது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது என்று கூறினார். 


 

Share this story