இரும்பு பெண்மணி போல் உடலை செதுக்கிவரும் நடிகை டாப்ஸி !
1608045942000

தமிழ், ஹிந்தி என பன்மொழிபடங்களில் நடித்து வரும் நடிகை டாப்ஸி தான் நடித்துவரும் ராஷ்மி ராக்கெட் படத்திற்காக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
ஆகர்ஷ் குரானா இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் உருவாகி வரும் ரஷ்மி ராக்கெட் படம் பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நந்தா பெரியசாமி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
டாப்ஸி தடகள வீராங்கனையாக நடிக்கும் படத்திற்காக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இப்படத்தில் தடகள வீராங்கனையாக நடிப்பதால் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பைக் கொண்டுவர டாப்ஸி கடுமையாக பயிற்சிஎடுத்து வருகிறார். உடல் இடையையும் இரும்பைப்போல் மெருகேத்தி அவற்றை அவரது சமூகவலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து வருகிறார்.

