இந்தி பட டீசரை வெளியிட்ட நடிகை த்ரிஷா

இந்தி பட டீசரை வெளியிட்ட நடிகை த்ரிஷா

இந்தியில் டைகர் ஷெரஃப் நடித்துள்ள கணபத் படத்தின் முன்னோட்டத்தை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபலம் ஷாக்கி ஷெரஃப்பின் மகனும், நடிகருமான டைகர் ஷெரஃப் நடித்துள்ள திரைப்படம் கணபத். விகாஷ் பால் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் டைகருக்கு ஜோடியாக, கிருத்தி சனோன் நடித்துள்ளார். இவர், அண்மையில் பிரபாஸூக்கு ஜோடியாகவும், சீதையாகவும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 

ஹீரோபண்டி திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் டைகர் மற்றும் கிருத்தி சனோன் இப்படத்தில் இணைந்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் முன்னோட்டத்தை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார். 

Share this story