அட கடவுளே!....மேட்ச் பாக்க போன இடத்தில் லெஜண்ட் பட நடிகைக்கு நடந்த சோகம்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தை கான சென்ற பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதெலாவின் தங்க ஐபோன் காணாமல் போயுள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஊர்வசி ரவுதெலா, கோலிவுட்டில் சரவணம் அருள் நடித்த ‘லெஜண்ட்’ படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் உலக கோப்பை தொடரின் அகமதாபாத்தில் நடந்த 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தை காண சென்றுள்ளார் . அப்போது நடிகை ஊர்வசி ரவுதெலாவின் 24 கேரட் தங்க ஐபோன் தொலைந்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா-பாக்கிஸ்தான் ஆட்டத்தை காண வந்தபோது எனது ஒரிஜினல் 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட ஐபோனை தொலைத்துவிட்டேன், யாரேனும் வைத்திருந்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.