பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

adipurush-233

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.  

பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை  க்ரித்தி சனோன் சீதையாக நடிக்கிறார். மேலும் நடிகர் சன்னி சிங் லட்சுமணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சைப் அலி கான் வில்லனாக நடிக்கிறார்.

adipurush-34

ஆதிபுருஷ் திரைப்படம் 3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ஆதிபுருஷ் திரைப்படம் 3டி டெக்னலாஜியில் இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. படக்குழுவினர் அதை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் ஆரம்பித்துள்ளன. 

adipurush

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள மற்றுமொரு பிரம்மாண்டப் படம் ராதே ஷ்யாம் இன்னும் சில மாதங்களில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story