நேற்று ராஷ்மிகா இன்று கத்ரீனாவா! – போலி வீடியோ குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி வைரலான நிலையில் தற்போது அதேபோல நடிகை கத்ரீனா கைஃபின் போலி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
காலத்திற்கேற்ப அப்டேட்டாகிவரும் இந்த உலகத்தில் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்டாக உள்ளது செயற்கை நுண்ண்றிவு எனப்படும் AI தொழில்நுட்பம்தான். இதன் மூலமாக புகைப்படம், வீடியோ, குரல் ஆகியவற்றை வசதிக்கேற்ப மார்பிங் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். சமீபத்தில் கூட பிரதமரின் குரலை பயன்படுத்து பாடல்கள் பாடுவதை போல சித்தரித்து வீடியோ வெளியிட்டு டிரெண்டாக்கி வந்தனர். தற்போது ஒரு படி மேலேபோய் அதனை தவறான முறையில் கையாள துவங்கியுள்ளனர்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது தொடர்ந்து பல பிரபலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது நடிகை கத்ரீனா கைஃபின் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இது போல தொடர்ந்து நடிகைகளின் வீடியோ வெளியாவது பிரபலங்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போல தொடர் போலியான வீடியோக்களை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது அதன்படி, இனி போலி வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது