முதலில் சமந்தா, இப்போ நாகசைதன்யா… பாலிவுட்டில் களமிறங்கும் தெலுங்கு ஜோடி!

முதலில் சமந்தா, இப்போ நாகசைதன்யா… பாலிவுட்டில் களமிறங்கும் தெலுங்கு ஜோடி!

நடிகர் நாகசைதன்யா அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் லால் சிங் சத்தா படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பாலிவுட்டை நோக்கி படையெடுத்து வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பிரபாஸ், விஜய் தேவரகொண்டா போன்ற நடிகர்கள் இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ளதால் பாலிவுட்டில் நுழைந்து அந்த மார்க்கெட்டை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். நடிகை ரஷ்மிகா, காஜல், ரகுல் உள்ளிட்ட நடிகைகளும் இந்தியில் ஏற்கனவே பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

முதலில் சமந்தா, இப்போ நாகசைதன்யா… பாலிவுட்டில் களமிறங்கும் தெலுங்கு ஜோடி!

சமீபத்தில் தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலமாக நடிகை சமந்தா பாலிவுட்டில் கால் தடம் பதித்தார். முதல் முயற்சியிலேயே பாலிவுட் ரசிகர்கள் மனதை வென்றுள்ளார் சமந்தா.

தற்போது சமந்தாவை அடுத்து அவரது கணவர் நாகசைதன்யாவும் பாலிவுட்டில் களமிறங்க உள்ளார். அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘லால் சிங் சத்தா’ படத்தில் முதலில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேதிகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகினார்.

முதலில் சமந்தா, இப்போ நாகசைதன்யா… பாலிவுட்டில் களமிறங்கும் தெலுங்கு ஜோடி!

தற்போது விஜய் சேதுபதிக்கு பதிலாக நாகசைதன்யா அந்தப் படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே நாகசைதன்யாவும் பாலிவுட் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கத் தயாராகி வருகிறார். அவருக்கு பாலிவுட் எந்தளவிற்கு கை கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்!

Share this story