லக்ஷ்மி மன்சு, டாப்ஸியை அடுத்து ரியா சக்ரபோர்த்திக்கு ஆதரவாக களமிறங்கிய வித்யா பாலன்!
ரியா சக்ரபோர்த்திக்கு ஆதரவாக ஏற்கனவே லக்ஷ்மி மஞ்சு, டாப்ஸி ஆகியோர் பேசியிருந்த நிலையில், தற்போது நடிகை வித்யா பாலனும் ரியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தற்போது பாலிவுட்டின் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருவதில் பல திருப்பங்கள் நிகழ்கின்றன. சுஷாந்தின் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த வழக்கில் நீதி கோருகின்றனர். பாலிவுட்டில் சிலர் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான்இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி என்று கூறுகின்றனர். பல ஊடகங்களும் இதே கருத்தை முன் வைக்கின்றனர்.
நடிகை லக்ஷ்மி மஞ்சு இதற்காக ஊடகங்களை சாட்டியிருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில் ”
பெண்ணை மான்ஸ்டர் போல ஊடகங்கள் சித்தரித்துள்ளன. இதனால் பலர் மவுனம் காப்பதைப் பார்த்தேன். எனக்கு நடந்த உண்மை என்னவென்று தெரியாது. தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மிகவும் நேர்மையான வழியில் உண்மை வெளியே வருமென்று நான் நம்புகிறேன். உண்மை என்னவென்று தெரியாமல் ஒரு நபரையும், அவரது குடும்பத்தையும் தாக்கி, அவர்களுக்குத் தீமையும், கொடுமையும் செய்யாமல் இருப்போமே!
ஊடகங்களின் இந்த செயல்முறையால் அந்த மொத்தக் குடும்பமும் அனுபவிக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அவரைத் தனியாக விடுங்கள். உண்மை அதிகாரப்பூர்வமாக வெளியே வரும் வரை காத்திருங்கள்.” என்று தெரிவித்திருந்தார்.
I didn’t know Sushant on a personal level nor do I know Rhea but what I know is, it only takes to be a human to understand how wrong it is to overtake judiciary to convict someone who isn’t proven guilty. Trust the law of the land for your sanity and the deceased’s sanctity 🙏🏼 https://t.co/gmd6GVMNjc
— taapsee pannu (@taapsee) August 30, 2020
“குற்றவாளி என நிரூபிக்கப்படாத ஒருவரைத் தண்டிப்பதற்காக நீதித்துறையை முந்திக்கொண்டு வருவது எவ்வளவு தவறு என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே நாம் மனிதர்களாக இருக்கமுடியும். உங்கள் நல்லறிவு மற்றும் இறந்தவரின் புனிதத்திற்காக நாட்டின் சட்டத்தை நம்புங்கள்” என்று நடிகை டாப்ஸி தெரிவித்திருந்தார்.
தற்போது பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் “இதை உரக்கச் சொன்னதற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் லட்சுமிமஞ்சு. அன்பான இளம் நட்சத்திரம் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் துயர மற்றும் அகால மரணம் ஊடகங்களுக்கு வேடிக்கை விளையாட்டாக மாறியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதே மூச்சில், ஒரு பெண்ணாக, ரியா சக்ரவர்த்தியின் இழிவுபடுத்தப்படுவது எனக்கு வருத்தமளிக்கிறது. இது ‘குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி’ என்று கருதப்படவில்லையா, அல்லது இப்போது ‘நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி’! ஒரு குடிமகனின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு ஓரளவு மரியாதை காட்டுவோம், சட்டம் அதன் போக்கில் செல்லட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
@LakshmiManchu pic.twitter.com/GnjPpsyoaq
— vidya balan (@vidya_balan) September 1, 2020