யூடியூப் சேனலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு போட்ட ஐஸ்வர்யா ராயின் மகள்.
ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதியின் மகளான ஆராத்யா பச்சன், சில யூடியூப் சேனல் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆராத்யா பொது நிகழ்சிகள் மற்றும் சில சினிமா நிகழ்சிகளில் தனது பெற்றோருடன் கலந்து கொள்வதை பார்த்திருப்போம். அவருக்கு தற்போது 12 வயதாகிறது. இந்த நிலையில் அவரது ஹேர்ஸ்டைல், நடை குறித்து பல விமர்சனங்கள் சமூகவலைதளத்தில் வட்டமடித்தன. அந்த சமயத்திலேயே அபிஷேக் பச்சன் விமர்சித்தவர்களை கடுமையாக சாடினார். தொடர்ந்து சமீபத்தில் ஆராத்யாவிற்கு உடல்நிலையில் பிரச்சனை என சில யூடியூபில் செய்திகள் பரவியது.
இதனை பார்த்து ஷாக்கான அவர் தனது தாயின் உதவியுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘தன்னுடைய உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம். அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இதனால் தான் பொன்னியின் செல்வன் 2 புரொமோஷனில் கலந்துகொள்ள வில்லை போல என கூறிவருகின்றனர். பிரச்சனை தீர்ந்த நிலையில் அடுத்து மும்பையில் நடக்கும் பிரொமோஷன் விழாவில் ஐஸ்வர்யா ராயை எதிர்ப்பார்க்கின்றனர்.