ஓரே இரவில் நடக்கும் சம்பவம்... அஜய் தேவ்கனின் 'போலா' டிரெய்லர் வெளியீடு !

bholaa

தமிழின் சூப்பர் ஹிட் படமான 'கைதி' படத்தின் இந்தி ரீமேக்கான 'போலா' படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘கைதி’. ஒரே நாளில் இரவில் நடக்கும்  ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக்காகி உள்ளது. 'போலா' என தொடங்கும் இந்த படத்தில் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடித்துள்ளார். 

bholaa

இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கவுள்ளார். அஜய் தேவ்கன் பட நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் விஎஃப்எக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பாலிவுட்டில அதிக எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. 

bholaa

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த படம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. 'கைதி' படம் போன்று இல்லாமல் அதிக ஹீரோயிசம் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம்பிடித்துள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரிஜினல் படத்திலிருந்து விலகியிருப்பதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

Share this story