‘போலா’ ப்ரோமோஷன் தொடங்கியது...லாரிகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அஜய் தேவ்கன்..

bholaa

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‘போலா’ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. 

bholaa

தமிழில் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த ‘கைதி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘போலா’. ஒரே நாளில் இரவில் நடக்கும்  ஆக்‌ஷன் த்ரில்லர் சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடித்துள்ளார். 

bholaa

இந்த படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் விஎஃப்எக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பாலிவுட்டில அதிக எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது.  இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கவுள்ளார். அஜய் தேவ்கன் பட நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

bholaa

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. ‘போலா’ படத்தின் போஸ்டர்கள் லாரிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த லாரிகளை கொடியசைத்து அஜய் தேவ்கன் தொடங்கி வைத்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

bholaa

 

Share this story