அப்பா - மகன் உறவை வியாபாரமாக்கிவிடாதீர்கள் - நடிகர் அஜய் தேவ்கன் உருக்கம் !

அப்பா மற்றும் மகன் உறவை எதற்காகவும் வியாபாரமாக்கிவிடாதீர்கள் என நடிகர் அஜய் தேவ்கன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் அஜய் தேவ்கன். 90-களில் இந்தியில் முன்னணி ஹீரோ இருந்த அவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வருகிறார். மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, நான்கு முறை தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என ஏராளமான விருதுகளைப் குவித்துள்ளார்.
தற்போது தென்னிந்திய சூப்பர் ஹிட் திரைப்படங்களின் ரீமேக் படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான 'திரிஷ்யம்' இந்தி ரீமேக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதேபோன்று தமிழில் மாபெரும் வெற்றிப்பெற்ற 'கைதி' திரைப்படத்தை 'போலா' என்ற பெயரில் ரீமேக் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் தமிழை போன்று இந்தியிலும் மாபெரும் வெற்றிப் பெற்றது.
இதற்கிடையே கடந்த 1995-ஆம் ஆண்டு நடிகை காஜல் முகர்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைசா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அப்பா, மகன் உறவு குறித்து உருக்கமாக பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அஜய் தேவ்கன் வெளியிட்டுள்ளார். அதில் என் மகனுடன் இருக்கும் இந்த நாள் தான் சிறந்த நாள். அப்பா, மகன் உறவை எதற்காகவும் வியாபாரமாக்கி விடாதீர்கள் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
The best part of any day is this…
— Ajay Devgn (@ajaydevgn) April 15, 2023
Won’t trade these baap-beta moments for anything in the world. pic.twitter.com/JZVjwBcwgx