அஜய் தேவ்கன் நடித்துள்ள 'ரெய்டு 2' பட டீசர் வெளியீடு

raid 2

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள 'ரெய்டு 2' படத்தின்  டீசர் வெளியாகி உள்ளது. 

இந்தி பிரபல நடிகரான அஜய் தேவ்கன், ராஜ் குமார் குப்தா இயக்கத்தில்  'ரெய்டு 2' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பானரோமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  2018 ஆம் ஆண்டு வெளியான ரெய்ட் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் கதையாக அமைந்துள்ளது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பாகமும் வெற்றி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது ரெய்டு 2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் அஜய் 74 ரெய்டு மற்றும் அவரது நேர்மையினால் 74 முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக நடித்து இருக்கும் ரிதீஷ் தேஷ்முக்கிடம் 75 வது ரெய்டை  நடத்தவுள்ளார் போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது.  மேலும் இப்படத்தில் ரிதீஷ் தேஷ்முக், வானி கபூர், ராஜத்  கபூர், சௌரப் ஷுக்லா, சுப்ரியா பதக் , அமித் சியால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

  

Share this story