3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் அக்ஷய் குமாரின் பெல்பாட்டம்!

bellbottom2-3

அக்ஷய் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெல்பாட்டம்’ படம் 3D தொழில்நுட்பத்திலும் வெளியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

ரஞ்சித் எம் திவாரி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் பெல்பாட்டம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் வாணி கபூர், லாரா தத்தா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

bellbottom-3d-3

இன்று பெல்பாட்டம் படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் அந்த படம் 3D தொழில்நுட்பத்திலும் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 3D என்பதால் படத்திற்கு மக்கள் படத்தை தியேட்டர்களில் காண ஆர்வமாக வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பெல்பாட்டம் இதற்கு முன்னர் ஜூலை 27-ம் தேதி வெளியாக இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. கொரோனாவுக்குப் பின்னர் தியேட்டரில் வெளியாகும் பிரம்மாண்டப் படம் பெல்பாட்டம் தான். எனவே இந்தப் படத்தின் மூலம் தியேட்டர்களில் மீண்டும் மக்கள் வரவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story