குரங்குகளுக்கு உணவளிக்க நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி நிதி

akshay kumar
ராமர் கோவில் இருக்கும் அயோத்தியில் குரங்குகளுக்கு தினமும் உணவளிக்க பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி நிதி அளித்தார். ஜகத்குரு ஸ்வாமி ராகவாச்சார்யாஜி மகராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆஞ்சநேய சேவா என்ற அறக்கட்டளை அயோத்தியில் தினமும் ஏராளமான குரங்குகளுக்கு உணவளித்து வருகிறார்கள். இந்த அறக்கட்டளைக்கு நடிகர் அக்ஷய் குமார் 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அயோத்தியில் உள்ள குரங்குகளை மக்கள் அனுமாராக கருதுவதால் அக்ஷய் குமார் நன்கொடை கொடுத்துள்ளார்.
 

Share this story