அக்ஷய் குமாரின் சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு கோடியா!?… ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவல் !

ஒவ்வொரு ஆண்டும், ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். தற்போது இந்த ஆண்டின் அதிக சம்பளம் பெற்ற டாப் 10 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் நம்ம அக்ஷய் குமார் தான். இவர் பாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் நடிகர்களில் ஒருவர். அதுமட்டுமில்லாமல் நம்ம விஜய் சேதுபதி மாதிரி திடீர்னு எதிர்ப்பார்க்காத கதாபாத்திரங்களில் கூட அசால்ட்டா நடித்துவிட்டுப் போவார். 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்ஷய் குமாரை நினைத்துப் பாருங்கள் புரியும்.
அக்ஷய் குமாரின் சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு கோடியா!?… ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவல் !
அக்ஷய் குமார் டாப் 10-ல் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் சம்பளமாக மொத்தம் 48.5 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். இந்திய மதிப்பில் 362 கோடி ரூபாய். இந்த சம்பளம் அவர் 2019 ஜூன் 1 முதல் இந்த ஆண்டு ஜூன் 1 வரை வாங்கியது.
கடந்த ஆண்டு, அக்‌ஷய் குமார் நடித்த ‘மிஷன் மங்கல்’, ‘ஹவுஸ்ஃபுல் 4’ மற்றும் ‘குட் நியூஸ்’ ஆகியவை படங்கள் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. அதன் பின்னர் மேலும் நான்கு படங்களில் நடித்துள்ளார்.

‘ஃபோர்ப்ஸ்’ தயாரித்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் ட்வானே ஜான்சன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு தி ராக் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. ராக் கடந்த ஆண்டு 87.5 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார்.
ரியான் ரெனால்ட்ஸ் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகர். அவர் கடந்த ஆண்டு மொத்தம் 71.5 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். மூன்றாவது இடம் நடிகரும் தயாரிப்பாளருமான மார்க் வால்பெர்க்கிற்கு, அவர் 58 மில்லியன் சம்பாதித்துள்ளார்.
அக்ஷய் குமாரின் சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு கோடியா!?… ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவல் !
நடிகரும் இயக்குநருமான பென் அஃப்லெக் நான்காவது இடத்தில் உள்ளார். 2020 ஆம் ஆண்டில் அவர் 55 மில்லியன் டாலர் சம்பாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வின் டீசல் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அக்‌ஷய் குமார் இருக்கிறார். ஃபோர்ப்ஸைப் பொறுத்தவரை, அக்‌ஷய் குமாரின் கடந்த ஆண்டு வருவாய் 362 கோடி, அதாவது ஒரு நாளைக்கு அவர் ஒரு கோடி சம்பாதித்ததாக அர்த்தம்!
அப்போ ஒரு நிமிசத்துக்கு எவ்ளோனு கணக்கு போட்டிங்கன்னா எங்களுக்கும் சொல்லுங்க!

Share this story