‘பெல்பாட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டார் அக்ஷய் குமார்!
அக்ஷய் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெல்பாட்டம்’ படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது.
அக்ஷய் குமார் நடிப்பில் ரஞ்சித் எம் திவாரி இயக்கத்தில் பெல்பாட்டம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் வாணி கபூர், லாரா தத்தா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தற்போது பெல்பாட்டம் படத்தின் ரிலீஸ் தேதியை அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார். “நீங்கள் பெல்பாட்டம் படத்தில் ரிலீசுக்காக காத்திருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். இறுதியாக எங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பெல்போட்டம் ஜூலை 27-ம் தேதி வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
அநேகமாக தியேட்டர்கள் திறந்தவுடன் வெளியாகும் முதல் படமாக இந்தப் படம் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெல்பாட்டம் படம் ரிலீஸ் ஆனால் தியேட்டர்களில் மீண்டும் மக்கள் வரவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.