அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ரக்ஷபந்தன்' பட ட்ரைலர் வெளியானது!

அக்ஷய்குமார் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ரக்ஷாபந்தன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
அக்ஷய்குமார், இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடித்த அத்ராங்கி ரே திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது மீண்டும் இருவரும் ரக்ஷாபந்தன் படத்திற்காக கூட்டணி அமைத்தனர். இந்தப் படத்தில் பூமி பாட்நகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நான்கு சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு தான், தான் திருமணம் செய்வேன் என்ற கொள்கையில் வாழும் கதாநாயகன். அதே சமயம் அவரின் காதல் கைமீறிச் செல்ல எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை!
தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க பேமிலி என்டெர்டெயினராக திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.