சிவனாக நடிக்கும் அக்சய் குமாரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

akshay kumar

கண்ணப்பா திரைப்படத்தில் சிவனாக நடிக்கும் அக்சய் குமாரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
 
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார்.

 

 



மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.ஏற்கனவே இந்த படத்தில் நடிக்கும் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரீத்தி முகுந்தன், காஜல் அகர்வால் போன்ற நட்சத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தநிலையில், தற்போது சிவனாக நடித்துள்ள அக்சய் குமாரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story