அக்ஷய் குமார் நடிச்ச 'லக்ஷ்மி பாம்ப்' படம் ஹாட் ஸ்டார்ல ரிலீஸ் இல்லயாம்! ஒன்லி இன் தியேட்டர்… படக்குழு அதிரடி முடிவு!?
அக்ஷய் குமார் நடித்துள்ள ‘லக்ஷ்மி பாம்ப்’ படம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக இருந்ததை அடுத்து தற்போது அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் ராகவா லாரன்ஸ் அக்ஷய் குமார் நடிப்பில் காஞ்சனா படத்தை லக்ஷ்மி பாம்ப் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் லக்ஷ்மி பாம்ப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு அக்ஷய் குமார் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாக இந்தப் படத்தை செப்டம்பர் 9-ம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது லக்ஷ்மி பாம்ப் படக்குழு டிஜிட்டல் வெளியீடு முடிவை கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வருடத்தின் தீபாவளிக்கு படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இந்த செய்தி அக்ஷய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.