அக்ஷய் குமார் படத்திற்கு அரபு நாடுகளில் தடை!

அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பிரித்திவிராஜ் படத்திற்கு சில அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் சாம்ராட் பிரித்விராஜ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரித்விராஜ் சவுகான் என்ற மன்னனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். நடிகை மனுஷி சில்லர் இளவரசி சன்யோதிதாவாக நடித்துள்ளார்.
கடைசி இந்து மன்னர் பிரிதிவிராஜ் சவுகான் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று இப்படம் பல மொழிகளில் வெளியாகியுள்ளது. தற்போது இந்தப் படத்திற்கு சில அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகலாய மன்னர் முகம்மது கோரி இடம் இருந்து நாட்டை பாதுகாக்க போராடிய இந்து மன்னர் பிருத்விராஜ் சவுகான் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மன்னருக்கு எதிராக படம் இருப்பதால் அரபு நாடுகளான குவைத், கத்தார் மற்றும் ஓமன் நாடுகளில் பிரித்விராஜ் படத்திற்கு தடை விதிக்கப்ட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
படம் வெளியாகும் முன்பே அந்த நாடுகள் படத்துக்கு தடை விதித்தது வருத்தமளிப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநா படத்தைப் பார்த்த பிறகு இந்தப் படத்திற்கு உத்தரபிரதேச மாநிலத்தில் வரிவிலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.