அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அக்‌ஷய் குமாரின் ‘பச்சன் பாண்டே’.. டிரெய்லர் வெ​ளியீடு !

bachen pandey trailer

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பச்சன் பாண்டே’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் ‘பச்சன் பாண்டே’. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஃப்ர்ஹாத் சாம்ஜி இயக்கியுள்ளார். சஜித் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இந்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

bachen pandey

ஏற்கனவே இப்படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாகும் என அக்ஷய்குமார் அறிவித்திருந்தார். ஆனால் திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை. இந்த படம் வரும் மார்ச் 18-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

bachen pandey

இந்த படம்  தமிழில் சூப்பர் ஹிட்டடித்து அஜீத்தின் ‘வீரம்’ படத்தின் ரீமேக்காகும். அண்ணன் மற்றும் தம்பிகளுடைக்கிடையேயான கதைக்களத்தை கொண்டு உருவான இப்படம் தமிழில் மாபெரும் வெற்றிப்பெற்றது.  சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story