'நான் இந்திய குடிமகன்தான்'- ஆதாரத்தை வெளியிட்ட ‘அக்ஷய் குமார்’.
இவர் இந்தியரே இல்லை கன்னடியன், என விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் அக்ஷய் குமார்.

அக்ஷய் குமாரின் தந்தை ராணுவ வீரர் என்பதாலோ என்னவோ அதிக தேச பற்று நிறைந்த படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2.o படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எக்கசக்கமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம்வரும் அக்ஷக்கு கடந்த 2011ஆம் ஆண்டு கனடா சுற்றுலா துறையை மேம்படுத்த கனடா நாட்டின் குடியுரிமை விசா வழங்கப்பட்டது. அதிலிருந்து இவர் இந்திய குடிமகனே இல்லை, கனடியன் என நெட்டிசங்கள் பலர் விமர்சித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் மற்ற இந்திய நடிகர்கள் மத்தியில் இவரை வேறுபடுத்தியும் வந்தனர். இதன் விளைவாக 2019ஆம் ஆண்டு கனடா நாட்டின் குடியுரிமையை திருப்பி கொடுத்துவிட்டு இந்திய பாஸ்போட்டிற்கு விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் தான் இந்தியன் தான் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


