கார்த்திக் ஆர்யன்- க்ரீத்தி சனோன் கூட்டணியில் இந்தியில் ரீமேக் ஆகும் 'ஆலவைகுண்டபுரம்லோ'!

kriti-sanon

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான  ‘ஆலவைகுண்டபுரம்லோ’ படத்தின் இந்தி ரீமேக்கின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஆலவைகுண்டபுரம்லோ’ படம் தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.இப்படத்தின் பாடல்கள் இந்தியா முழுதும் அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக புட்ட பொம்மா பாடல்.

Shehzada

அதையடுத்து ஆலவைகுண்டபுரம்லோ திரைப்படம் இந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்தி ரீமேக்கிற்கு "ஷெஹ்சதா" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார், பூஜா ஹெக்டே கதாபாத்திரத்தில் கிருத்தி சனோன் நடிக்கிறார். மனிஷா கொய்ராலா தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரோனித் ராய், ஜெயராம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

Shehzada

ரோஹித் தவான் என்பவர் இந்தப் படத்தை இயக்க உள்ளார். தெலுங்கு பதிப்பைப் போலவே இந்தி ரீமேக்கும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படம் அடுத்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

Share this story