’யூ டர்ன்’ இயக்குநருடன் இணையும் அமலாபால்… சத்தமில்லாமல் பாலிவுட்டில் கால்பதிக்கிறார்…
கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘யூ டர்ன்’. திகில் நிறைந்த பேய் படமான யூடர்ன் படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார் இயக்குநர் பவன் குமார். இப்போது அவர் இயக்கவுள்ள புதிய வெப் சீரிஸான ’குடி யெடமைதே’ ( Kudi yedamaithe ) வெப் சீரிஸில் அமலா பால் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நேர்த்தியான, தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் அமலாபால், தமிழில் ‘அதோ அந்த பறவை போல’ படத்தைத் தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில் ’கடாவர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவர் தற்போது நடிக்கவுள்ள, பேண்டஸி திரில்லராக உருவாகும் ’குடி யெடமைதே’ தொடர் 8 பகுதிகளை கொண்டது. அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாக கொண்ட கதை இது.

அடுத்து நந்தினி ரெட்டி இயக்கும் ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்த படங்கள், தொடர்கள் தவிர ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் விஸ்வேஷ் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் பாலிவுட்டில் அமலாபால் அறிமுகமாகவுள்ளார்.