ஹிந்தி ரீமேக்கில் ஆல்டர்ரேஷன் எல்லாம் செய்துவிட்டு அபிட்டான அமீர்கான்!

ஹிந்தி ரீமேக்கில் ஆல்டர்ரேஷன் எல்லாம் செய்துவிட்டு அபிட்டான அமீர்கான்!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் ”விக்ரம் வேதா” .இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்திருப்பர்.

ஹிந்தி ரீமேக்கில் ஆல்டர்ரேஷன் எல்லாம் செய்துவிட்டு அபிட்டான அமீர்கான்!

இந்த படம் தமிழில் நல்ல ஹிட் அடித்ததால் இந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி பாலிவுட்டில் நடிகர் ஷாருகானிடம் படத்தின் இந்தி ரீமேக் குறித்து இயக்குனர் புஷ்கர் காயத்ரி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த படத்தில் ஆர்வம் காட்டாத சாருக் கான் படத்தை புறக்கணித்துவிட்டார். அதன் பின்னர் நடிகர் அமீர்கானிடமும் சைப் அலிகானிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அவர்கள் ஒப்புக்கொள்ளவே, விஜய்சேதுபதி கேரக்டரில் அமீர்கானும், மாதவன் கேரக்டரில் சைப் அலிகானும் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது.

ஹிந்தி ரீமேக்கில் ஆல்டர்ரேஷன் எல்லாம் செய்துவிட்டு அபிட்டான அமீர்கான்!

இப்படத்திற்கு முதலில் ஒப்பந்தமாக விருப்பம் தெரிவித்த அமீர்கான் கதையில் சில மாற்றங்களையும் செய்திருந்தார்.

கதையின் மாற்றங்கள் எல்லாம் முடிவு செய்யப்பட்டு ஆரம்பிக்க இருந்த நிலையில் கொரோனா காலகட்டம் படத்தை தள்ளிவைத்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் படத்தின் மீது ஆர்வம் குறைந்த அமீர்கான் தற்போது விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் புஷ்கர் காயத்ரி குழப்பத்தில் உள்ளார். படத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திவிட்டு, அமீர்கான் படத்திலிருந்து விலகி உள்ளது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story