'65 வயதுக்கு மேல்… கூடாது'.அரசு போட்ட அதிரடி உத்தரவு,ஆடிப்போன 'அமிதாப்பச்சன்!'
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.படப்பிடிப்பில் , 65 வயதை தாண்டியவர்கள் பங்கேற்க கூடாது என்று மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்ததை எதிர்த்து கோர்ட்டில்வழக்கு தொடரப்பட்டது .
தற்பொழுது இவ்வழக்கில் ,அரசின் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு ’65 வயதுக்கு மேற்பட்டோர் படப்பிடிப்பில் பங்கேற்கலாம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.முன்னர் வெளிவந்த அறிவிப்பால் ஆடிப்போயிருந்த அமிதாப்பச்சன் தற்போது தான் பெருமூச்சு விட்டு நார்மல் மோடுக்கு வந்திருக்கிறார்.
இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது: “65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை எனது மனதை மிகவும் பாதித்தது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்ல கூடாது. அவர்கள் வேலை செய்ய லாயக்கு இல்லாதவர்கள் என்று அரசு நிர்வாகம் முடிவு செய்தது.
அப்படியென்றால் என்னைபோன்ற 78 வயதுக்காரர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? இது மிகவும் கஷ்டமான முடிவு. இந்த தடையை திரைப்பட சங்கம் கோர்ட்டுக்கு கொண்டு சென்று தீர்ப்பின் மூலம் நீக்கியதால் பிரச்சினை தீர்ந்து விட்டது.
ஆனால் கோர்ட்டு தடையை நீக்குவதற்கு முன்னால் என்னை போன்றவர்கள் மனரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்? நாங்கள் சினிமாதான் தொழில் என்று இருக்கிறோம். நடிப்பை விட்டு நான் வேறு தொழில் செய்வதற்கு ஏதாவது வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள்.” இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.அவர் கூறுவதும் ஒரு வகையில் நியாயம்தானே..!