கண்கலங்கிய ‘அமிதாப் பச்சன்’ சோகத்தில் ரசிகர்கள்!

கண்கலங்கிய ‘அமிதாப் பச்சன்’  சோகத்தில் ரசிகர்கள்!

ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கண்கலங்கினார்.

கண்கலங்கிய ‘அமிதாப் பச்சன்’  சோகத்தில் ரசிகர்கள்!

தொடர்ந்து 16 ஆண்டுகளாக இந்தி திரையுலகில் உட்சபட்ச நடிகராக இன்றளவும் கோலோச்சி வரும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ட்விட்டரில் 45 மில்லியன் பின்தொடர்பர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். இந்தி திரையுலகுக்கு நான்கு தசாப்தங்களாக பங்களித்து, முடிசூடா மன்னனாக இருக்கிறார். திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கும் அவர், இன்றைய காலத்துக்கு ஏற்ப சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

இதையொட்டி ரசிகர் ஜாஸ்மின் என்பவர் வாழ்த்து புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்தார்.  அந்த புகைப்படத்தில் அமிதாப், தனது தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். இந்தப் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அமிதாப் பச்சன், அந்த புகைப்படத்தின் பின்னணியை விளக்கியுள்ளார். 

கண்கலங்கிய ‘அமிதாப் பச்சன்’  சோகத்தில் ரசிகர்கள்!

‘கூலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் எனக்கு விபத்து ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியபோது, என்னை பார்க்க வந்த தந்தை உடைந்து, கண்ணீர்விட்டு அழுதார். அப்போது, அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் இது. தந்தையிடம் இருக்கும் சிறுவன் அபிஷேக் பச்சன். இதுவரை கூலி திரைப்படம் பார்க்கவில்லை. இந்த வலியுடன் இனியும் அந்த படத்தை பார்க்கமாட்டேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

கண்கலங்கிய ‘அமிதாப் பச்சன்’  சோகத்தில் ரசிகர்கள்!

1982ம் ஆண்டில் அமிதாப் பச்சன் – புனீத் இசார் ஆகியோர் நடித்துக்கொண்டிருந்த கூலி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அமிதாப் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. அந்த ஆபரேஷன் செய்யும்போது அமிதாப்புக்கு வேறொருவரின் ரத்தம் கொடுக்கப்பட்டது. அந்த நபருக்கு இருந்த Hepatitis B என்ற கல்லீரல் நோய், அமிதாப்புக்கும் தொற்றிக்கொண்டது. இதனால் இன்றளவும் கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

கண்கலங்கிய ‘அமிதாப் பச்சன்’  சோகத்தில் ரசிகர்கள்!

இவ்வளவு சோகம் நிறைந்த நினைவலைகளைக் கொண்ட அமிதாப் புகைப்படத்தை பகிர்ந்த ரசிகர் ஜாஸ்மின், இதுவரை கூலி திரைப்படம் பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், இந்த வலியுடன் இனியும் அந்த படத்தை பார்க்கமாட்டேன் எனக் தெரிவித்துள்ளார். அவரின் சோக நினைவுகளைக் கேட்டு தங்களின் சோகத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.


Share this story